தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் (22.02.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவல்துறையினரின் கலவர தடுப்பு பயிற்சி (Anti Riot Training) நடைபெற்றது. இந்த பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், சட்டவிரோதமாக கூடும் கலவர கூட்டத்தை காவல்துறையினர் எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் எனவும், கலவரம் நடக்கும் போது காவல்துறையினரின் பணிகள் குறித்தும், கலவர கூட்டத்தை கட்டுப்படுத்த தண்ணீர் பீச்சி அடிக்கும் வஜ்ரா கனரக வாகனத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம், திரு. தீபு, ஆயுதப்படை காவல் உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் C. மதன் இ.கா.ப, தூத்துக்குடி பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வி. மீரா இ.கா.ப மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன், சார்பு ஆய்வாளர் திரு. சங்கரலிங்கம் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.