தென்காசி : தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலாங்கரை பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.ஷியாம் சுந்தர், அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.சரசையன், தனிபிரிவு காவலர் திரு.அரவிந்த், முதல்நிலை காவலர்கள் திரு.ரமேஷ்,திரு.சுப்பிரமணி,காவலர்கள் திரு.சுரேஷ், திரு.ராஜ்சேகர் ஆகியோர் ரோந்து பணியில் இருந்த போது அங்கு விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த சண்முகவேலு என்பவரின் மகன் பரமசிவன் (32), மற்றும் காஜா மைதீன் என்பவரின் மகன் அப்துல் ரசாக் (32),ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஏப்ரல் மாதம் விஸ்வநாதபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 10 கிலோ கஞ்சா தன்னுடையது தான் என்பதையும் பரமசிவம் ஒப்புக்கொண்டுள்ளார்.பின்னர் இரண்டு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.