திருநெல்வேலி : தமிழகத்தில் போதை வஸ்துகள் உபயோகப்படுத்துதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மனஅழுத்தத்தால் அதிகமான தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. இதனை ஒழிக்கும் விதமாக தமிழக காவல்துறை பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து போதை ஒழிப்பு குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்தை போதை வஸ்து இல்லாத தமிழகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி, அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் போதை ஒழிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை போக்கும் நோக்கத்தோடு அம்பாசமுத்திரம் காவல்துறை மற்றும் அம்பாசமுத்திரம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இணைந்து போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் துறையின் மூலம் மினி மாரத்தான் ஓட்டம் ஆண்கள் (10 கி.மீ) மற்றும் பெண்கள் (5 கி.மீ) என மாரத்தான் ஓட்டம் (20.11.2022) ம் தேதி அம்பாசமுத்திரத்தில் இன்று காலை நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 4000 கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
காவல்துறை மூலம் நடத்தப்பட்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மூலம் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சென்றிருப்பது திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு மகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் திரு. முகமது சபீர் ஆலம் அவர்கள், 12th பட்டாலியன் தளவாய் திரு. கார்த்திகேயன் அவர்கள், ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமதி. ஆனந்தவள்ளி அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன், அவர்கள், அம்பை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. பல்பீர்சிங் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.