தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் நடுவப்பட்டி சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினர் இணைந்து இந்திய நாட்டின் ஒற்றுமையும், ஒருமை பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பழனிக்குமார் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி எடுக்கப்பட்டது, இதைப்போல் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.