தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு கல்லூரி எதிரே நேரு நகரில்,இன்று டி.எஸ்.பி திரு.அண்ணாதுரை அவர்களும் மற்றும் இன்ஸ்பெக்டர் திரு.ரங்கசாமி அவர்களும் மற்றும் அனைத்து காவல் துறை சார்பிலும்,
இங்கு வசிக்கும் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி சட்டம் ஒழுங்கு குறித்தும் திருட்டு சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது,
இதில் முக்கியமானதாக அனைவரும் அவர்கள் வீட்டில் சி.சி.டிவி கேமராக்களை பொருத்து மாறும் மற்றும் பெண்கள் உதவி மையம் செயல்படுவது குறித்தும், மற்றும் சந்தேகப்படும்படி யாராவது நடமாடினால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த தொலைபேசி எண்கள் அறிவித்தும்,
இது தொடர்பாக ஹெல்ப்லைன் தொலைபேசி எண்களையும் இன்று நோட்டீஸ் மூலம் அனைவருக்கும் வழங்கி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,
இதனால் இங்கு வசிக்கும் மக்கள் அனைவருக்கும் காவல்துறை மேல் மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது என்றும் இந்த நல்ல முயற்சிக்கு நன்றி தெரிவித்தும் காவல்துறையை மக்கள் பாராட்டினார்.