திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் கேரளா சுற்றுலா வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொடைக்கானல் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. மதுமதி மற்றும் காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கரன் மற்றும் காவல் துணை ஆய்வாளர் திரு. முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டபோது பாலமலை பகுதியை சேர்ந்த காசி மாயன் என்பவர் மகன் நீதி ராஜன் வயது (38). இவர் கடந்த சில வருடங்களாக காவல்துறைக்கு போக்கு காட்டி பாலமலை பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது இதனை தெரிந்த தனிப்படை போலீசார் அவரது தோட்டத்தில் சோதனை செய்த போது அவர் மறைத்து வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் .
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா