திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கங்கைகொண்டான் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் தாழையூத்து ஜே.ஜே. நகரைச் சேர்ந்த முருகன் (44). என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















