கரூர்: கரூர் மாவட்டம் வரவனை கிராமம் பகுதியை சேர்ந்தவர் காவலர் பாலமுருகன் இவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். சென்னை குன்றத்தூர் மணிகண்டன் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சங்கர் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் என்பவர் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் எவருக்கும் முறையாக விடுப்பு வழங்கவில்லை என்பது கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலமுருகன் உறவினர் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் ஏற்கனவே வாராந்திர விடுமுறை இருக்கின்றது அதை உறுதிப்படுத்துமாறு ஆய்வாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு ஆய்வாளர் சரவணன் விடுப்பு தர முடியாது எனவும் உடனடியாக பணிக்கு சேர வேண்டும் என டியூட்டி லிஸ்ட்டை வாட்ஸ் அப் குழுவில் சேர்த்துள்ளார். இதனை கண்ட பாலமுருகன் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அவசர அவசரமாக தனது மனைவி வினோதினியை அழைத்துக் கொண்டு கரூர் மாவட்டத்திலிருந்து தனது காரில் புறப்பட்டு வந்துள்ளார். அப்பொழுது உளுந்தூர்பேட்டை வழியாக வரும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்ட நிலையில் உயிரிழப்பு.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்