திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2ஆம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் (09.11.2025) அன்று நடைபெற்றது. அதன்படி, திருநெல்வேலியில் மாவட்ட அளவில் 3 மற்றும் மாநகரில் 6 என மொத்தம் 9 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இதில், தேர்வு பணிக்காக மாநகர , மாவட்ட காவல்துறை சார்பில் மொத்தம் 774 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், தேர்வுக்காக 9,284 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 8,183 பேர் தேர்வில் பங்கேற்றனர். 1,101 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வு மையங்களை திருநெல்வேலி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளரான கே.எஸ்.நரேந்திரன் நாயர், இ.கா.ப., திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், இ.கா.ப., ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்














