தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் திருமதி.ராஜேஸ்வரி.இகாப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இரண்டாம் நிலை காவலர்கள் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் சிறை காவலர்களுக்கான உடற்பகுதி தேர்வு தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த தேர்வில் பங்கேற்க தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த ஆண் தேர்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட தேர்வர்களுக்கு முதல் நாள் சான்றிதழ் சரிபார்ப்பு,உயரம், மார்பளவு மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றன. உடற்தகுதி தேர்வில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுதாஸ் அவர்கள் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாமலை அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.