கோவை : கொரோனா என்னும் கொடிய தொற்று நோய்க்கு, நம்மை பாதுகாக்க முன்கள பணியாளர்களாக, பணியாற்றும் காவலர்கள் மரணமடைவது வேதனைக்குரியது. நம் உயிர் காக்க தன் உயிரை பணயம் வைத்து பணியில் ஈடுபடும் காவலர்கள் நலனுக்காக நலனை கருத்தில் கொண்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு.சுமித் சரண், IPS அவர்கள், காவலர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக, கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு.சுமித் சரண், IPS அவர்கள், தடுப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், நிவாரண பொருள்களான கிருமிநாசினி, முகக்கவசம், கையுறை, போன்றவற்றை நேற்று முன்தினம் கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் வைத்து 611 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வழங்கினார். மேலும் அதேநாளில் சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் வைத்து 606 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்