சென்னை : சென்னையில் பாதுகாப்பு பணியில், இருந்த ஆயுதப்படை காவலர், பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு அம்பத்தூரில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் இவருக்கு பாதுகாப்பு பணி, கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை, 4 மணி அளவில் சரவணகுமார், பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால், சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த அம்பத்தூர், காவல் துணை ஆணையர் திரு. மகேஷ், உதவி ஆணையர் திரு. கனகராஜ், காவல் ஆய்வாளர்கள் திரு. ராமசாமி, மற்றும் திரு. கிருஷ்ணமூர்த்தி, தலைமையிலானகாவல் துறையினர் ,சம்பவ இடத்திற்கு சென்று சரவணகுமார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் சரவணக்குமார், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில், பணத்தை இழந்து கடும் மன அழுத்தத்தில், இருந்த நிலையில் தற்கொலை, செய்து கொண்டது தெரியவந்ததாக, காவல் துறையினர் ,தெரிவித்தனர்.