அரியலூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.மனோகர் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் உத்தரவின்படியும், (12.02.2024)ம் தேதி அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.R.விஜயராகவன் அவர்களின் தலைமையில் போதைப் பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு.M.தண்டபானி அவர்கள் மாணவர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதினால் ஏற்படும் சமுதாய சீர்கேடு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினார். மேலும் இதற்கு அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள இலவச தொலைபேசி எண் *10581* பற்றி எடுத்துக்கூறப்பட்டது. எவ்வாறு கஞ்சா மற்றும் பிற போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு செய்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி முதல்வர், மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி.அமரஜோதி,பயிற்சி அலுவலர்கள், பயிற்றுநர்கள் மற்றும் மாணக்கர்கள் கலந்து கொண்டனர்.