தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ செலவு மற்றும் கல்வி உதவி தொகைக்காக விண்ணப்பித்திருந்த 19 காவல்துறையினருக்கு, காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் (09.01.2026) வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு காவலர் சேமநல நிதி மூலம் வழங்கப்படும் இத்தகைய உதவிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். மேலும், காவல்துறையினர் தங்களது பணியுடன் குடும்ப பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்ற இந்த நிதி உதவிகள் துணையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.
















