மதுரை : சிவகாசி லிங்கபுரம் காலனியைச், சேர்ந்த (14), வயது சிறுவன் அப்பகுதி, பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் பணத்தை எடுத்ததால், பெற்றோர் கண்டித்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. கிழக்கு காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
தொழிலாளி பலி : சாரதா நகரைச் சேர்ந்த ராஜகுரு (42), வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட, இவர் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் இரவு மாத்திரை சாப்பிட்டு துாங்கிய நிலையில் இறந்தார். திருத்தங்கல் காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
முன் விரோதத்தில் தாக்குதல் : திருத்தங்கல் பாண்டியன் நகரைச், சேர்ந்தவர் சமுத்திரம் (58), இவருக்கும் இவரது சகோதரர், ஒளிவுராஜனுக்கும், முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் சமுத்திரம், ஒளிவுராஜனின் வீட்டில் வேலை பார்க்கும் குமார், என்பவரை அழைத்து தன்னிடம் உள்ள மாட்டில் பால் கறக்க கூறியுள்ளார். ஆத்திரமடைந்த ஒளிவுராஜன் அவரது மகன் மாரிமுத்து, சமுத்திரத்தை அடித்து காயப்படுத்தினர். திருத்தங்கல் காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
சிறுமி மாயம் சிவகாசி: விஸ்வநத்தம் காமராஜர், நகரைச் சேர்ந்த (16), வயது சிறுமி அடிக்கடி அலைபேசியில் பேசியுள்ளார். இவரது தாயார் கண்டித்ததால், வீட்டை விட்டு வெளியேறியவர், மீண்டும் திரும்பவில்லை. டவுன் காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி