தேனி : தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு.ராஜேந்திரன் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்ததையடுத்து அவரின் குடும்பத்தாரின் வருங்கால நலன் கருதி 1993-ஆம் வருடம் காவல் துறையில் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள் ஒன்றுசேர்ந்து திரட்டப்பட்ட நிதி உதவியை இன்று தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் இறந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் (DCB) திரு.P.பாண்டிசெல்வம் அவர்கள் உடனிருந்தார்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி