இராமநாதபுரம்: கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள காவலர் குடியிருப்புகளில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம், தரம் மற்றும் வசதிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் விசாரித்து தேவையான வழிமுறைகளை வழங்கினார்.
















