தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னெடுப்பின்படி தூத்துக்குடி வடபாகம் காவலர் குடியிருப்பில் உள்ள பழுதுகளை பராமரிக்கும் பணியும் மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் புதிதாக உடற்பயிற்சி கூடம் மற்றும் குடியிருப்புகளுக்கு புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேற்படி காவலர் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் மற்றும் கட்டுமான பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (08.10.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு பணிகள் குறித்து கேட்டறிந்து காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.