திண்டுக்கல் : போலீசார் விசாரணையில் அவர் தேனி மாவட்டம் போடி சொக்கலிங்கநகரைச் சேர்ந்த முத்து (32) , என உறுதி செய்யப்பட்டது. திருப்பூரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது உடன் பணிபுரியும் சில ஊழியர்களிடம் பணம் திருடியதாக அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால் சம்பவத்தன்று அதே பாரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முத்துவுக்கு நன்றாக மது வாங்கிக் கொடுத்து குடிபோதையில் இருந்த அவரை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டினர்.
இதில் முத்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை திருப்பூரிலேயே போட்டுவிட்டால் உடன் வேலை பார்த்த நாம் மாட்டிக் கொள்வோம், என நினைத்து வேறு எங்காவது வீசிவிட முடிவு செய்து அதன்படி ஒரு காரில் அவரது உடலை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி வந்தனர். சுங்கச்சாவடியை கடந்ததும் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே முட்புதரில் வீசிவிட்டு மாயமாகினர்.