தேனி: பொதுமக்களிடம் போலீஸார் கனிவாக நடக்க வேண்டும் என தேனி எஸ். பி. அறிவுரை கூறினார். தேனி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி.திரு.பிரவீன் டோங் ரே,அனைத்து காவல் சப்-டிவிசன்களிலும், நேரடியாக சென்று, போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளிடம், கலந்துரையாடி வருகிறார்.
இதில் பொதுமக்களிடம், மிக மரியாதையாக நடந்து கொள்ள வேண்டுமென அறிவுரை கூறப்படுகிறது.ஆண்டிபட்டி காவல் நிலையத்தில், காவல்துறையினர் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் பற்றி பொதுவான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையிலும், டி.எஸ்.பி. திரு.தங்க கிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. காவல்துறை ஆய்வாளர் திரு.முத்துபாண்டி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் அனைத்து போலீஸ்காரர்கள் கலந்து கொண்டனர். இதில் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தல் பற்றி பேசினார்.