மதுரை: மதுரை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.K.அர்விந்த், இ.கா.ப., அவர்கள் குற்ற சம்பவங்கள் அதிகம் நிகழும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய இருசக்கர வாகனம் ரோந்துகளை இயக்க உத்தரவிட்டார்கள்.
அதன் அடிப்படையில் அலங்காநல்லூர் காவல் நிலைய சரகம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகம் போன்ற முக்கிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், ஆயுதம் ஏந்திய இரு சக்கர ரோந்து நியமித்து, சட்ட விரோத செயல்கள் பற்றியும், சமூக விரோதிகளின் நடமாட்டம் பற்றியும் கண்காணித்து வருகின்றனர். இதில் சமூக விரோத செலவில் ஈடுபடும் நபர்களை மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இப்பணியில் நியமிக்கப்பட கூடிய காவலர்கள் தங்களுடன் எப்போதும் ஆயுதங்களை வைத்திருப்பர், சமூக விரோத மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்















