கன்னியாகுமரி: கடைநிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் கலந்துரையாடும் மனம் திறந்து நிகழ்ச்சி மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடந்த ஆண்டு 122 அதிகாரிகள் உட்பட 2000 போலீசார் உடன் கலந்துரையாடி உள்ளார்கள். இதன் மூலம் காவலர்களின் 100 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வார விடுமுறை செயலி,எஸ்.எஸ்.ஐ வில்சன் காவலர் நினைவு தங்கும் விடுதி உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க காவலர்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது காவலர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் இன்று (02-02-2026) முதல் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து தொடங்கியது .
இந்தக் கலந்துரையாடலின் போது காவலர்கள், தாங்கள் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள் சாதனைகள், தனிப்பட்ட பிரச்சனைகள்,
▫️காவல்துறையை மேம்படுத்த ஆலோசனைகள் போன்றவைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் பகிர்ந்து கொள்வர்.மனம் திறந்து 2.0 திட்டத்தின் நோக்கம் காவலர்களின் பிரச்சனைகளுக்கு நேரடி தீர்வு கடைநிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தங்கள் பணிச்சவால்கள் மற்றும் தேவைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்க முடியும்.
காவலர் நலன் மேம்பாடு பணி அழுத்தம், மனஅழுத்தம், குடும்ப பிரச்சனைகள் போன்றவற்றை புரிந்து கொண்டு தேவையான காவலர் நல நடவடிக்கைகள் எடுக்க முடியும். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை காவலர்களின் கருத்துகள் கேட்கப்படுவதால் பணியில் ஆர்வமும் உற்சாகமும் அதிகரிக்கும். அதிகாரிகள் காவலர்கள் இடையேயான தொடர்பு மேம்பட்டு ஒருங்கிணைந்த பணியாற்றும் சூழல் உருவாகும். புதிய ஆலோசனைகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் காவலர்கள் தரும் பயனுள்ள ஆலோசனைகள் மூலம் காவல்துறையின் சேவை தரம் மேலும் உயர்வடையும். காவல்துறை மக்கள் சேவை தரம் உயரும் காவலர்கள் நலமாக இருந்தால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையும் மேலும் சிறப்பாகும்.
















