நெல்லை: நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக காவல் துணை ஆணையாளர் திரு.ராசராசன் உளுந்தங்கஞ்சி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை உதவி ஆணையாளர் திரு. முத்தரசன்,ஆய்வாளர்கள் திரு.பேச்சிமுத்து ராணி மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.