தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. (23.11.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் திருமதி. முத்துலெட்சுமி, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – III உதவி வழக்கறிஞர் திரு. கண்ணன், விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் திருமதி. ரேவதி, சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் திரு. ராஜாமோகன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரும், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. உன்னி கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி உட்கோட்டம் திரு. சத்தியராஜ், தூத்துக்குடி ஊரக உட்கோட்டம் திரு. சுரேஷ், திருச்செந்தூர் திரு. வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் திரு. மாயவன், மணியாச்சி திரு. லோகேஸ்வரன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு திரு. சிவசுப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. ஜெயராஜ், ஆயுதப்படை திரு. புருஷோத்தமன் உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.