தென்காசி: தென்காசி மாவட்டம், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பல்வேறு இக்கட்டான பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில், தென்காசி உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினருக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமான விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர் .