மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில்., கொரோனா ஊரடங்கு உத்தரவினால் அதிகளவு பணிச்சுமை காரணமாக காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்வில் சமூக ஆர்வலர் அப்துல் ரஹ்மான் மற்றும் மாநகர காவல் உதவி ஆணையர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்வில்., சமூக ஆர்வலரும் விளையாட்டு ஆராய்ச்சியாளருமான அப்துல் ரகுமான் கண்டறிந்த “அஸ்யூடு” என்ற சமூக சிந்தனை விளையாட்டிற்கு பயிற்சி அளித்து மன அழுத்தத்தை போக்கும் வகையில் பயிற்சி அளித்தார்.இது குறித்து திருப்பரங்கு காவல் உதவி ஆணையர் சண்முகம் கூறுகையில்
மன அழுத்தத்தை போக்கும் “அஸ்யூடு” விளையாட்டினை கொண்டு வந்து என்னை அப்துல் ரஹ்மான் என்னை அணுகிய போது., குடும்பம் மற்றும் சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கையாள்வது குறித்தான நன்மைகளை கேட்டறிந்ததும் திருப்பரங்குன்றம் காவல் நிலைய காவலர்களை ஒன்றிணைத்து விளையாட வைப்பது முடிவு செய்ததாகவும்.
, அதன் தொடர்ச்சியாக காவலர்கள் தங்கள் வாழ்வில் அமைதியான முறையில் பிரச்சனைகளை கையாள்வது குறித்தான பயிற்சி இன்று வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும்., “அஸ்யூடு” விளையாட்டானது ஒரு சாதாரண விளையாட்டாக மட்டுமல்லாமல் வாழ்வின் கல்வியில் ஒரு பகுதியாக இருக்கும் என கூறினார்.
விளையாட்டை விளையாடிய தலைமை காவலர் கூறுகையில்எங்களுக்கு ஏற்படும் பணி சுமைகள் காரணமாக தேவை இல்லாமல் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களிடம் வாக்குவாதம் செய்வதை நிறுத்துவதற்கு இவ்விளையாட்டு மூலம் சிந்திக்க வைக்கிறது,
மேலும் எந்த பணியை எடுத்துக்கொண்டாலும் நிதானத்துடன் செல்ல வேண்டும் என கற்றுகொடுகிறது என்றார்.