திருப்பத்தூர் : வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் வேலூர் மாவட்ட காவலர் எண் (Mono block ) கொண்டே தங்களை அடையாளப்படுத்தி வந்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கும் “புதிய திருப்பத்தூர் மாவட்ட காவலர் எண் (Monoblock)” திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களால் இன்று (29/12/2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.
திருப்பத்தூரில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
முஹம்மத் மஹ்பூஜ் க