தென்காசி : தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒரு காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவலர்களில் மூன்று வருடங்களை நிறைவு செய்து வேறு காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு நேரடி கலந்தாய்வு( 23.09.2024) தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 96 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். காவல் ஆளிநர்கள் விருப்பம் தெரிவித்த காவல் நிலையங்களில் அவர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.