திருநெல்வேலி: தமிழக அரசின் ஆணைப்படி, கோடை வெயிலை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., கலந்து கொண்டு வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல் துறையினரை பாதுகாத்து அவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானங்களை வழங்கினார்.
மேலும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும், உடல் நல பராமரிப்புகள் குறித்தும் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், வெங்கடேஷ் வள்ளியூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர், சுடலைமுத்து வள்ளியூர் காவல் ஆய்வாளர், நவீன் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்