திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணி புரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி, மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய பெண் தலைமை காவலர் சரஸ்வதி மற்றும் தனிப்பிரிவில் பணிபுரியும் முதல் நிலை காவலர் நம்பிராஜன் ஆகியோர் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக காவலர் சேம நல நிதியை பெற்றுத் தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தனர். அதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மூன்று காவலர்களுக்கும், சேம நல நிதியிலிருந்து பெற்ற உதவி தொகையை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (16.10.2025) அன்று வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்