திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவச் செலவுத் தொகைக்கு விண்ணப்பித்திருந்த காவலர்களுக்கு, காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.. சிலம்பரசன், இ.கா.ப., (09.04.2025) அன்று வழங்கினார். அதன்படி, வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ராஜ்குமார், மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் கிறிஸ்டோபர் பீட்டர் குமார் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. முன்னதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 19 பேர் பங்கேற்று மனு அளித்தனர். மனுக்களைப் பெற்ற காவல் கண்காணிப்பாளர், அவற்றின் மீது விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















