திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால துரித நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் மாநகரில் உள்ள 7 காவல் நிலையங்கள் சார்பில் தலா 1 இருசக்கர ரோந்து வாகனம் மற்றும் பாளையங்கோட்டை காவல் நிலையத்திலிருந்து 2 இருசக்கர ரோந்து வாகனம் என மொத்தம் 9 ரோந்து வாகனங்கள் மூலம் அதிநவீன துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த காவலர்களுக்கு சேரன்மகாதேவி துப்பாக்கி சுடும் தளத்தில் புத்தாக்க பயிற்சி மற்றும் சிறப்பு துப்பாக்கி சுடுதல் பயிற்சி (06.05.2025) அன்று அளிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்