திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் ரோந்து அலுவல் செல்லும் காவலர்களுக்கு உடையின் மேல் அணியும் வகையில் 25 புதிய நவீன ரக டிஜிட்டல் கேமராக்களை (Body Worn Camera) திருநெல்வேலி சரக துணை தலைவர் திரு.பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.
காவல் துறையினர் மேற்கொள்ளும் பணிகளில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை கண்காணிக்க உடலில் அணியும் புதிய நவீன டிஜிட்டல் கேமராக்களை காவல்துறையினர் தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு அவர்கள் பணிகளை மேற்கொள்ளும் போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோவாகவும், ஆடியோவாகவும் மற்றும் போட்டோவும் பதிவு செய்ய கூடிய வசதி உள்ளது. காவல்துறையினர் வாகன சோதனை, மனு விசாரணை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற காவல்துறையின் பல்வேறு வகையான பணிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவல்துறையினருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
மேலும் சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குரல் பதிவு வாசகங்கள் அடங்கிய அடங்கிய மெகா போன்களை 32 இருசக்கர ரோந்து வாகனத்தில் பொருத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர ரோந்து வாகனத்தை இன்று திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று துவக்கி வைத்தார்கள்.
பின் ரோந்து செல்லும் காவலர்களுக்கு கேமராக்களின் பயன்கள், முக்கியத்துவம் குறித்தும் பொது இடங்கள் மற்றும் கூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு.மதிவாணன் அவர்கள், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கு அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன் அவர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்கள், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் (பொ) திரு.ராஜ், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி,மாவட்ட தொழில் நுட்பப்பிரிவு ஆய்வாளர் திரு.முத்துவேல், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.