திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, மற்றும் சூரியா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய காவலர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் (13.012.2025) அன்று நடைபெற்றது. இம்முகாமில், திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர், ஊர்க் காவல் படையினர் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களுக்கு முழு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சுகாதார விழிப்புணா்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இம்முகாமில் காவலர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















