திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இன்று (03.01.2026) அன்று நடைபெற்றது. இந்த பயிற்சிகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ.கா.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். பயிற்சியின் போது காவலர்களின் ஒழுக்கம், உடல் தகுதி, அணிவகுப்பு திறன் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், காவல்துறையினர் உடல்தகுதியுடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றும், சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளில் திறம்பட செயல்பட உடற்பயிற்சி அவசியம் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், பணியில் எப்போதும் விழிப்புடன் இருந்து, பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வின் போது ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
















