திருநெல்வேலி: இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது. அதன்படி திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில், (21.10.2024)-ம் தேதியன்று, காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர், பா.மூர்த்தி,இ.கா.ப., மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., மாநகர காவல் துணை ஆணையாளர்கள் V. கீதா,(மேற்கு) G.S. அனிதா,(தலைமையிடம்) S. விஜயகுமார்,(கிழக்கு) மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்திரன், மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர், பேச்சிமுத்து உட்பட காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மலர் வளையம் வைத்து, 54 குண்டுகள் முழங்க, இன்னுயிர் நீர்த்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்