தென்காசி; தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பாறையடி பகுதியில் சார்பு ஆய்வாளர் திருமதி. கமலாதேவி மற்றும் காவலர் திரு.சண்முகராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது.
அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று நபர்களை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ய முயற்சித்தபோது அவர்கள் பெண் சார்பு ஆய்வாளரையும் காவலரையும் பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து திருவேங்கடம் சார்பு ஆய்வாளர் திரு. மோகன குமார் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி பெண் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவரின் மகன் முத்துராமன் 37, கீழ திருவேங்கடம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராமராஜ் 38. மற்றும் தங்கராஜ் என்பவரின் மகன் ஜெபகனி 49. ஆகிய 03 நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.