திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் 31.10.2021 அன்று தபால் அலுவலாக மாவட்ட காவல் அலுவலகம் சென்று திரும்பி மானூர் சென்று கொண்டிருந்தபோதுவண்ணார்பேட்டை அருகே கனமழை பெய்ததால் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பாதிப்படைவதை கண்டுள்ளார்.
பின்னர் யாரும் முன்வராத நிலையில் காவலர் சுப்பிரமணியன், அருகிலிருந்த மரக்கிளையை உடைத்து சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் நட்டு வைத்தார்.
காவலர் திரு.சுப்பிரமணியனின் இச்செயல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,IPS., அவர்கள் காவலர் சுப்பிரமணியனின் நற்செயலை வெகுவாக பாராட்டினார்.