அரியலூர்: அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயக்க நிலையில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை கண்ட அரியலூர் நகர காவல் நிலைய காவலர் திரு.தீபன் அவர்கள் பொதுமக்களின் உதவியுடன் முதல் உதவி செய்து, தண்ணீர் மற்றும் மோர் வழங்கினார். அதன் பிறகு மாற்றுத்திறனாளியின் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தார். காவலரின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினார்கள்.