திருவள்ளூர் : பொன்னேரி ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சிறு சிறு பொட்டலமாக வைத்துக்கொண்டு இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்வதாக பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பொன்னேரி ஆய்வாளர் மார்ட்டின் பிரேம் ராஜ் உதவி ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் அங்கு சென்றதில் போலீசை கண்டதும் ஓடி மறைந்தவரை பிடித்து. விசாரித்த போது பொன்னேரி அடுத்த திருவாயார் பாடியை சேர்ந்த ஜாபர் அலி (30)என்பது தெரிய வந்தது அவரிடம் இருந்து சிறு, சிறு பொட்டலங்கள் கஞ்சா 1200 கிராம் பறிமுதல் செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்