அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா, அவர்கள் மறைந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார்கள். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் தெய்வதிரு.செல்வராஜ், அவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இதையடுத்து அவருடன் பணிக்கு சேர்ந்த 1999 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள், தமிழ்நாடு காவல்துறை 1999 பேட்ச் உதவும் உறவுகள் என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்து அதன்படி சுமார் 2755 பேர் இணைந்து, மறைந்த தலைமைக் காவலர் செல்வராஜ் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 13,93,500 பணத்தை திரட்டி இன்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள்.