தருமபுரி : தமிழக காவல் துறையில் 2022ல் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களாக தருமபுரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி காவலர் திரு.கிருஷ்ணன், என்பவர் 2 நாட்கள் விடுமுறையில் சென்ற போது ஏற்பட்ட வாகன விபத்தில் ஆகஸ்ட் 20-ம் தேதி இறந்து விட்டார். மேலும் HDFC- வங்கியில் Police Package முறையில் நான்கு மாதங்க சம்பளம் பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
HDFC வங்கியிலிருந்து #விபத்து_காப்பீடு தொகையான ரூ,70,00000-/- (எழுபது லட்சம் ) பணத்தை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி..கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் இறந்த பயிற்சி காவலரின் குடுப்பத்திற்கு வழங்கபட்டுள்ளது. காப்பீட்டு தொகையை பெற்றுத்தந்த HDFC-வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது