தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் தெய்வத்திரு. கொடிவேல் என்பவர் கடந்த (13.08.2023) அன்று காலமானார். மேற்படி கொடிவேல் அவர்களது குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 2008ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூபாய் 25,85,800/- பணம் நன்கொடையாக பெற்று, அவற்றை வங்கி நிரந்தர வைப்புத் தொகைகள் மற்றும் ரொக்கமாகவும் (24.10.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து 2008ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் மேற்படி கொடிவேல் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.