திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம்.சத்திரம் அருகில் (02.11.2025) ஞாயிறன்று காலை திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி (47). பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















