சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆலம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. (34) இவர் சாக்கோட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை பணிக்கு திரும்பியபோது, திருச்சி-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி,எதிரே வேகமாக வந்த கார் மோதி காவலர் ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த குன்றக்குடி காவல் நிலையத்தினர்,உயிரிழந்த ராஜாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி