தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் சொக்கநாதபுரம் தாய் மெட்ரிக் பள்ளி பின்புறம் வசிப்பவர் அண்ணாதுரை மகன் குமரேசன் (37). விவசாயியான இவர் இவர் தனது வீட்டு முன்பு கேரள மாநில பதிவு எண் கொண்ட ஸ்விப்ட் காரை நிறுத்தி இருந்தார். இரவு தூங்க சென்று விட்டு காலையில் எழுந்து பார்த்தபோது காரை காணவில்லை.
இதுபற்றி கடந்த 9 ஆம் தேதி தேதி சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் காரை கள்ளச்சாவி போட்டு திருடியதாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் வல்லக்கடவைச் சேர்ந்த சாபு மகன் சுமேஷ்குமார் (30) என்பவரை கைது செய்தனர்.
மேலும் கார் திருடுவதற்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரி, ஷாடி, அஜித் ஆகிய மூன்று பேர்களையும் தேடி வருகின்றனர்.