சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் பதிவான குற்ற எண் 5/2026 வழக்கில் தொடர்புடைய குணா, வெற்றிவேல், தினேஷ், முத்துப்பாண்டி, சின்னையா, ஹரிஹரன் ஆகிய 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி கா. பொற்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.02.2026) குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
















