சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஸ்ரீராம் நகர் வள்ளல் அழகப்பர் சிலை எதிரே அமைந்துள்ள காரைக்குடி கிட்ஸ் ஸ்கூல் அண்ட் டேய் கேர் பள்ளி திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. காரைக்குடி உக்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆசீஸ் புனியா ஐபிஎஸ், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி, குழந்தைகள் நல மருத்துவர் அறிவழகன், காரைக்குடி மாநகர துணை மேயர் என் .குணசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர். பள்ளி திறப்பு விழா நிகழ்வினைத் தொடர்ந்து விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது. பள்ளி நிர்வாக இயக்குனர்கள் ரூபா ஸ்ரீ, ராஜ சுலக்சனா அனைவரையும் வரவேற்றனர். விழாவில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி