திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையின்போது காவல்துறையினர் மறித்தும் நிற்காமல் சென்ற சந்தேகத்திற்கிடமான காரை மணப்பாறை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் துரத்தி சென்று மறித்த போது அந்த காரில் இருந்த நான்கு நபர்களும் காரை விட்டுவிட்டு தப்பியோடிய நிலையில் காரை சோதனை செய்ததில் காரில் கடத்தி வரப்பட்ட 85 1/2 கிலோ கஞ்சா மற்றும் 5 போலி நம்பர் பிளேட்டுகள் கைப்பற்றப்பட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தப்பியோடிய நபர்களை கைது செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
















