விருதுநகர்: காரியாபட்டி சூரனூரில் கைலாசநாதர் ஆனந்த வல்லி கோயில் நந்தவனத்தில், விருதுநகர் ஆலமர அமைப்பின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கோயில் பட்டர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ராதிகா, ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலமரம் ஒருங்கிணைப்பாளர் புஷ்ப ராஜ் வரவேற்றார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாச்சியார், ஏ.எஸ்.பி., கருண்காரத்மரக் கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர்.
ஆலமர அமைப்பு பற்றி தலைவர் ரவீந்திரன் பேசினார்.இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜய குமார், ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, மனித பாதுகாப்புக் கழக மாவட்டத்தலைவர் பிரின்ஸ், நிர்வாகிகள் கார்த்திக், முனிஸ்வரன் பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, வி.ஏ.ஓ., தனசேகரன், நிர்வாகி சக்திவேல் செய்திருந்தனர். ஆலமர அமைப்பு நிர் வாகி எட்வர்ட் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி